காசா மீதான யுத்தத்தை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: டிரம்ப் எச்சரிக்கை
காசா யுத்தத்தை இஸ்ரேல் மிகவிரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியிலேயே டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிற்கான இந்த கடுமையான செய்தியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தில் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றதெனவும் மற்றும் இரத்தக்களறியை வேகமாக முடிவிற்கு கொண்டுவரவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தம்
அத்தோடு இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் மற்றும் மக்களை கொலை செய்வதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தம் மேற்கொள்பவர்கள் இதனை செய்தாகவேண்டும் அத்தோடு இயல்பு நிலை சமாதானத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதால் இஸ்ரேல் இதனை மிகவேகமாக செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் போதுமான அளவிற்கு இஸ்ரேலிற்கு ஆதரவளிக்கவில்லையென டிரம்ப் தெரிவித்ததோடு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் உத்தேச வேட்பாளர், காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் இஸ்ரேல் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாக்குதல்
இதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், இஸ்ரேல் செயற்படும் விதம் எனக்கு பிடித்துள்ளதா என்பதை தெரிவிக்க முடியாது ஏனென்றால் நீங்கள் வெற்றிபெறவேண்டும் ஆனால் அந்த வெற்றிக்கு நீண்டகாலம் எடுக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இத்தோடு இஸ்ரேல் தனது தாக்குதல் குறித்த காணொளிகளை வெளியிடுவதை அமெரிக்காவின் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
பயங்கரவாத உட்கட்டமைப்புகளிற்கு எதிரான தாக்குதல்களென தெரிவித்து இஸ்ரேல் விமானக் குண்டுவீச்சுகள் உட்பட ஏனைய தாக்குதல்களின் காணொளிகளை வெளியிட்டு வருகின்றது.
பிரச்சார யுத்தம்
அவர்கள் அவ்வாறான காணொளிகளை வெளியிடக்கூடாது. அதன் காரணமாகவே இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தில் தோல்வியடைகின்றதென டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டிடங்கள் இடிந்துவிழும் மிகவும் கொடுரமான காணொளிகளை இஸ்ரேல் வெளியிடுகின்ற நிலையில் இந்த காணொளிகளை பார்த்த மக்கள் அது பலர் வசிக்கும் கட்டிடங்கள் என நினைக்கின்றனர் எனவும் மக்கள் அதனை விரும்பவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தை இழப்பதுடன் பெரியளவில் அதில் தோல்வியடைந்தாலும் அவர்கள் ஆரம்பித்ததை அவர்கள் வேகமாக முடித்துவைக்க வேண்டுமெனவும் நாங்கள் வாழ்க்கையை தொடரவேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |