65 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்தால் நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனை :அனுமதி அளித்தார் ட்ரம்ப்

Donald Trump United States of America
By Jaso Oct 06, 2026 04:53 PM GMT
Report

கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஹூட் இராணுவ முகாமில் 13 பேரைச் சுட்டுக் கொன்ற வழக்கில், கைதான முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜர் நிடால் ஹசனுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அளித்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

65 ஆண்டுகளுக்கு பின்னர்  நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனை

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது 1961-ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தால் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக அமையும். மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு (1945-க்கு பின்) அமெரிக்க இராணுவத்தில் துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.

65 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்தால் நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனை :அனுமதி அளித்தார் ட்ரம்ப் | Trump Approves Execution Of Ex Army Major

தற்போது கன்சாஸ் மாகாணத்தில் உள்ள இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிடால் ஹசனை, இண்டியானாவில் உள்ள பெடரல் சிறைக்கு மாற்றி தண்டனையை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான துல்லியமான திகதி மற்றும் இடத்தை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் விரைவில் முடிவு செய்வார் என பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவக் கொள்கை மற்றும் சட்டங்களின்படி, ஒரு ராணுவக் கைதிக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி அனுமதி அளித்த 60 நாட்களுக்குப் பிறகும், 150 நாட்களுக்குள்ளும் அந்தத் தண்டனை கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மரணதண்டனைக்கான காரணம்

அமெரிக்க இராணுவத்தில் மனநல மருத்துவராகவும், மேஜராகவும் பணியாற்றிய நிடால் ஹசன், கடந்த நவம்பர் 5, 2009 அன்று போர்ட் ஹூட் இராணுவ முகாமிற்குள் புகுந்து சக இராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த கொடூரத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் படுகாயமடைந்தனர்.

65 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க இராணுவத்தால் நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனை :அனுமதி அளித்தார் ட்ரம்ப் | Trump Approves Execution Of Ex Army Major

கைது செய்யப்பட்ட இவருக்கு, கடந்த 2013-ஆம் ஆண்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இறுதி ஒப்புதலுடன் இவருக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் இறையாண்மையை மீண்டும் சோதிக்கும் ஈரானியக் கப்பல்கள்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்

இலங்கையின் இறையாண்மையை மீண்டும் சோதிக்கும் ஈரானியக் கப்பல்கள்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025