ஜெலென்ஸ்கி - ஜோ பைடன் மீது ட்ரம்ப் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுடனான மோதல் குறித்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் முன்மொழிவு பற்றி விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடியுள்ளனர்.
போர் வன்முறை
இந்த சூழலில் ட்ரம்ப், உக்ரைனின் தலைமை அமெரிக்க ஆதரவைப் பாராட்டத் தவறிவிட்டதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு வன்முறை மற்றும் பயங்கரமானது.
சரியான அமெரிக்க மற்றும் உக்ரைன் தலைமை இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது.
கணிசமான அளவு
நான் இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஜோ பைடன் நிர்வாகத்தின் போது இந்த போர் தொடங்கியது பின்னர் மேலும் மோசமாகிவிட்டது.
ஒருபோதும் நடக்கக்கூடாத ஒரு போரை எனது பதவிக்காலத்தில் நான் பெற்றேன், இந்த போர் அனைவருக்கும் குறிப்பாக கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தோல்வியாகும், உக்ரைன் தலைமை நமது முயற்சிகளுக்கு எந்த ஆதரவும் தரவில்லை பாராட்டவும் இல்லை.

மேலும் ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்கின்றது, உக்ரைனுக்காக நேட்டோவிற்கு கணிசமான அளவு ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றது.
அதே நேரத்தில் ஜோ பைடன் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தார், மனிதப் பேரழிவில் இழந்த அனைத்து உயிர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |