ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் பொய் கூறுகிறீர்கள்: ஐ.ஆர்.ஜி.சி தெரிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை தொடர்பிலான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்களை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் துணை அரசியல் தளபதி அலி மொஹம்மதி நிராகரித்துள்ளார்.
“ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெயும் கப்பல்களும் உண்மையிலேயே செல்கின்றன என்றால், எண்ணெய் சந்தை ஏன் அதங்கேற்ப எதிர்வினையாற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து தொடர்பில் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்பதை சந்தையும் புரி்ந்துகொண்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகம் ஒன்று மேற்கோள் காட்டியுள்ளது.
முழுமையான கண்காணிப்பு
அத்துடன் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்பு படை அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறிய கூற்றையும் கேள்விக்குட்படுத்தினார்.

மேலும் அமெரிக்கப் படைகள் ஹோர்முஸ் நீரிணையை நெருங்காமல் எதனால் 600 முதல் 700 கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளன எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளில் கப்பல்களின் நடமாட்டத்தை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்பு படை முழுமையாக கண்காணித்து வருவதாகவும் அலி மொஹமதி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |