அடுத்த இலக்கு கொலம்பியா! ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையில் தற்போது நாடு கடத்தியுள்ள பின்னணியில் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
கொலம்பிய ஜனாதிபதி
இந்த நடவடிக்கையால் ஏற்படும் எந்த விளைவுகளும் குறித்து கவலைப்படவில்லை என்று கொலம்பிய ஜனாதிபதி குஸ்டவோ பெட்ரோ சமீபத்தில் கூறிய கருத்துகள் குறித்து கேட்டபோது, செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் நேரடியாக பதிலளித்தார்.

“குஸ்டவோவுக்கு கோகெயின் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன, அவர் கோகெயின் தயாரிக்கிறார்.
அவர்கள் அதை அமெரிக்காவிற்கு அனுப்புகிறார்கள், எனவே குஸ்டவோ தனது தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |