அமெரிக்கர்கள் ட்ரம்ப் மீது கடும் கோபத்தில்..! சரியும் செல்வாக்கு: அதிர்ச்சி அறிக்கை
ஈரான் மீதான போருக்கு மத்தியில் டொனால்ட் டரம்பின் செல்வாக்கு இரண்டாவது பதவிக்காலத்திலேயே இல்லாத அளவுக்குக் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீதான போரை அவர் கையாண்ட விதத்தின் காரணமாக, செல்வாக்கு 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புதிய என்பிசி நியூஸ் (new NBC News) கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த (2025) ஆண்டு ஜனவரி 20-ந் திகதி டொனால்ட் டரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்றார்.
கடும் அதிருப்தி
ஈரான் - இஸ்ரேல் போரில் தலையிட்டு, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால், அமெரிக்காவுக்கு பாதுகாப்பு தளவாடங்களுக்கான செலவு அதிகரித்தது.

மேலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் அதிகரித்தது, இது அமெரிக்கர்கள் மத்தியில் டரம்ப் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறான பின்னணியில் ஞாயிற்றுக்கிழமை புதிய என்பிசி நியூஸ் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகளின்படி, அமெரிக்கவில் உள்ள வயது வந்தோரில் 63 சதவீதம் பேர் டரம்பின் பணி செயல்திறனை ஏற்கவில்லை என்றும் அவர்களில் 50 சதவீதம் பேர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்கான எதிர்ப்பு
வயது வந்தவர்களில் 61 சதவீதத்தினர் ஈரானில் அமெரிக்கா மேலும் எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

எனினும் அமெரிக்காவில் உள்ள இளம் வயதினரிடையே போருக்கான எதிர்ப்பு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |