கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு
கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார்.
கனடாவிடம் இருக்கும் பொருட்கள் இல்லாமல் தங்களால் சமாளிக்க முடியும் என்றும், சில பொருட்கள் தற்காலிகச் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அவற்றை வேறு நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முறிந்ததால், 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50% புதிய வரியை ட்ரம்ப் சனிக்கிழமை விதித்தார்.
வரி விதிப்புகள்
அத்துடன் ஜனவரி 1 முதல் கனடிய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீதும் 50% வரி நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.

இதற்குப் பதிலடியாக கனடா, சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள் மீது அதே அளவு பதில் வரியை விதித்து, வரும் செப்டம்பர் 8 முதல் அது நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனடா நிராகரித்த ஒப்பந்தத்தை விட மோசமான ஒரு ஒப்பந்தத்தையே எதிர்காலத்தில் பெற முடியும் என வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |