இந்தியாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை
அதிக வரி வசூலிப்பதை இந்தியா (India) குறைத்துக் கொள்ளும் என தான் நம்புவதாக அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
அமெரிக்காவின் செலவினங்களை குறைக்க பல நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்தினார்.
வரி விதிப்பு
குறிப்பாக, அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அத்தோடு, எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிப்பதாகவும், அதில் இந்தியாவும் ஒன்று என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அவரது இந்த நடவடிக்கைகளால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
அதிக வரி
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.
ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர்.
அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன் அத்தோடு, ஏப்ரல் இரண்டாம் திகதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாங்களும் அவர்களிடம் வசூலிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்