அமெரிக்கா - ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ட்ரம்பின் முதல் குறி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீடித்துவரும் பதற்றம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் அணு திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ள நிலையில், தாக்குதல் விவாதம் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுவதாவது, ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் முக்கிய மையங்களான Natanz Nuclear Facility மற்றும் Fordow Fuel Enrichment Plant போன்ற இடங்கள் துல்லியத் தாக்குதலுக்கான முக்கிய இலக்குகளாகக் கருதப்படுகின்றன.
இவ்விடங்கள் ஈரானின் அணு திறன் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்கா நம்புகிறது.
மேலும், ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் புரட்சிகர காவல்படை கட்டளை மையங்களும் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் ஆய்வாளர்கள் கருத்துப்படி, அமெரிக்கா நேரடி போரை விட பொருளாதாரத் தடைகள், கூட்டணி நாடுகளின் ஆதரவு மற்றும் துல்லியமான உளவுத்துறை நடவடிக்கைகள் போன்ற மூலோபாயங்களை முன்னிலைப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும் ஈரானுக்கு பத்து நாட்கள் என்ற காலக்கெடுவை விதித்துள்ள ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் அடுத்த நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |