அதி தீவிர ஆக்கிரமிப்பினுள் திருகோணமலை : அரசியல் அனாதைகளாய் மாற்றப்பட்ட தமிழர்கள்
தமிழர்களின் வரலாற்றுத் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை மிக நீண்டகாலமாக சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு இன்று அதி தீவிரமான ஆக்கிரமிப்புகளால் நிறைந்துபோயுள்ளது.
அங்கு வாழக்கூடிய தமிழர்களின் இருப்பு தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளும் அட்டூழியங்ககளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
திருகோணமலை மாவட்டத்தில் திருக்கோணேச்சரத்தில் தொடங்கி எல்லைக்கிராமங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆக்கிரமிப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தின் பின்பு அதிகரித்துக் காணப்படுகிறமை கண்கூடு.
கன்னியா , குச்சவெளி , கும்புறுப்பிட்டி , சாம்பல்தீவு , சம்பூர் மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படியான அபாயகாரமான சூழலில் இருக்கும் திருகோணமலை மற்றும் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதியாக மாவட்ட அபிவிருத்திச்சபை அமர்வுகளில் கூட இவர்களுக்காக பேசுவதற்கு ஒரு உறுப்பினர் இல்லாத நிலையில் அரசியல் அநாதைகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புழுதி சமூக உரிமைகள் அமைப்பின் இணைப்பாளர் திருநாவுக்கரசு கோபகன் தெரிவித்துள்ளதை காண்போம்