யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Shalini Balachandran May 01, 2026 01:09 AM GMT
Report

யாழில் 16 பெண் ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தைத் தவறான முறையில் சித்தரித்த குற்றச்சாட்டில் ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மருதங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பணியாற்றிய ஆசிரியர்களின் புகைப்படமே இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றச்சாட்டிலேயே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

முன்னெடுத்த விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலையில் எடுக்கப்பட்ட ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தை எடுத்த மாணவர்கள், அதனை AI தொழில்நுட்பம் மூலம் தவறான முறையில் மாற்றியுள்ளனர்.

யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது | 5 Jaffna Students Held Over Ai Morphed Photos

பின்னர் அந்தப் புகைப்படங்களை வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மூலம் பகிர்ந்துள்ளனர். இது குறித்துப் பாடசாலை நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருதங்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் மொட்டுக்கட்சியின் ஆட்சி உறுதி...! சூளுரைக்கும் முக்கிய புள்ளி

மீண்டும் மொட்டுக்கட்சியின் ஆட்சி உறுதி...! சூளுரைக்கும் முக்கிய புள்ளி

விளக்கமறியல் 

அவர்கள் இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் மாணவர்களின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, நான்கு மாணவர்களின் கைபேசிகளில் அவ்வாறு மாற்றப்பட்ட தவறான புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது | 5 Jaffna Students Held Over Ai Morphed Photos

இந்நிலையில் மாணவர்கள் நீதிமன்ற விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் ஜனாதிபதி கடும் கண்டனம்!

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் ஜனாதிபதி கடும் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்