குழந்தை வைஷாலியின் கரம் அகற்றப்பட்டதன் பின்னணி இதுதான்: அறச்சீற்றத்தில் குடும்பத்தினர்
அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியது மாத்திரமல்லாமல், வைத்தியசாலைகள் மீதும் சுகாதார சேவைகள் மீதும் அவநம்பிக்கையை ஆழ்மனதில் விதைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
சாதாரண காய்ச்சலுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மணிக்கட்டுடன் கரங்களை இழக்கும் வயது அந்த சிறுமிக்கும் இல்லை நோய் அத்தைய பாதகமானதுமில்லை.
இன்று வரை எத்தனையோ கருத்துக்கள் சமூகத்தில் உலாவி வந்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பும், கடந்து செல்ல முடியாத சோகமுமே இந்த வைஷாலியின் மாணிக்கட்டுடன் கரம் அகற்றப்பட்ட சம்பவம்.
தாதியரில் பிழை,வைத்தியசாலை நிர்வாகத்தில் பிழை என்று சுட்டிக்காட்ட எம்மிடம் ஆயிரம் காரணம் இருந்தாலும் இங்கே கரம் இழந்து ஒரு குழந்தையின் கனவுகள் முடமாக்கப்பட்ட குற்றத்திற்கு தண்டனை தான் என்ன?
யார் மீது உண்மையில் தவறு? குழந்தையின் கரம் அகற்றப்பட்டதன் பின்னணி என்ன? யாரெல்லாம் இந்த பாவத்தின் பங்குதாரர்கள்? என்று எத்தனையோ கேள்விகள் இன்னும் முற்றுப்பெறாமலே நீடித்துக்கொண்டிருக்கிறது.
ஐபிசி தமிழின் "சக்கர வியூகம் " நிகழ்ச்சியில் இந்த அனைத்து கேள்விகளுக்குமான பதிலை குழந்தை வைஷாலியின் பெரிய தந்தை அளிக்கும் செவ்வியினூடாக அறிந்து கொள்வோம்.
இது குற்றத்தை அலசும் நோக்கிற்காக அல்ல, இன்னுமொரு வைஷாலி யாழில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான முயற்சி