தவெகவின் முக்கிய உறுப்பினர் அதிரடி கைது
தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிருக்கு அச்சுறுத்தல்
இந்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் மற்றும் பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய விசாரணை
இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
அத்தோடு, புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
