தமிழகத்தில் தொடரும் பதற்றம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
🛑புதிய இணைப்பு
தமிழகத்தின் கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்றாம் இணைப்பு
தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர். இதில் 35 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 27, 2025
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை…
இதனடிப்படையில், தற்பொழுது வரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 12 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் என மொத்தம் 38 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🛑முதலாம் இணைப்பு
தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூரில் இன்று (27) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான பிரசார கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்திருந்தனர்.
தீவிர சிகிச்சை
இந்தநிலையில் கழகத்தின் தலைவர் விஜயை காண குவிந்த கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள்
அத்துடன், பத்து பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் என மொத்தம் 29 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
