கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு
accident
police
death
By Jaso
நாட்டில் கொரோனா தொற்றை அடுத்து பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளாந்தம் விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்வதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இதன்படி கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
இவற்றில் 08 பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள். ஏனையவர்களில் மூவர் பாதசாரிகள் என்பதுடன், முச்சக்கர வண்யில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி