“டுபாய் தனுஷ்க”வின் சகாக்கள் போதைப்பொருளுடன் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “டுபாய் தனுஷ்க” என்பவரின் நெருங்கிய நண்பர்கள் இருவர் 20 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கையிருப்பு
கைது செய்யப்படும் சந்தரப்பத்தில் சந்தேகநபர்களிடமிருந்து 200 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அண்மையில் “முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |