புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து ஒய்ய பகுதிக்கும் இதழ்கஸ்ஸின்ன பகுதிக்கும் இடைப்பட்ட சுரங்கத்துக்கு அருகில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்றுவதற்காக, பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து பாய்ந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞரும் காயமடைந்துள்ளார் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புகையிரதத்தின் கதவு பகுதியில் நின்றவாறு, மேற்படி யுவதி செல்ஃபி எடுக்க முயன்றபோது, தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து காயமடைந்த தம்பதியினர் அதே புகையிரதத்தில் ஹப்புத்தளைக்கு கொண்டுவரப்பட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் ஹப்புத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.