ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்கள் இருவர் கைது
Keheliya Rambukwella
Sri Lanka
Arrest
By Abi
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டிற்காக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்களான முசரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை விட மேலதிகமாக பணியாளர்களை இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை அப்போதைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி