மாரடைப்பு காரணமாக குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்!
Trincomalee
Sri Lanka
Death
Kuwait
Women
By Abi
குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கைப் பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம் ஆண்டு குவைத் நாட்டுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் அங்கு அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 04ஆம் திக திகதி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
திடீர் மாரடைப்பு
உயிரிழந்த பெண், திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிவக்கொழுந்து மீனா என்ற 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை குடும்பத்தினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி