விசேட அதிரப்படைக்கு கிடைத்த இரகசிய தகவல் -இன்றுகாலை முல்லைத்தீவில் இருவர் கைது
Police
Arrest
Mullaitivu
By Vasanth
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இன்று காலை பெறுமதியான வலம்புரிச்சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
வலம்புரிச்சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே வத்தளையைச் சேர்ந்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபர்களையும், வலம்புரி சங்கினையும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
குறித்த நபர்கள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகிறது
வலம்புரிச்சங்கை ஐந்து கோடி ரூபா பெறுமதிக்கு விற்பதற்காக கொண்டுவந்துள்ளதாக அறியமுடிகிறது
4ம் ஆண்டு நினைவஞ்சலி