தெல்லிப்பளை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : பெண் உட்பட இருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Arrest
By Jaso
சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் இன்று (19) கைது செய்துள்ளனர்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட உபகரணங்கள்
இவர்களிடமிருந்து 30 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 95250 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர் 2, கம்பிச்சுருள் 1, அடுப்பு மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி