கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி! வெளியாகும் அதிர்ச்சிகர பின்னணி
புதிய இணைப்பு
தலங்கம, அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியுமே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிந்த சட்டத்தரணி கரந்தெனிய சுத்தா என்ற குற்றவாளியின் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையான ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கரந்தேனிய சுத்தா தொடர்பான தகவல்களை லொகு பெட்டி என்பவரின் பாதாள உலக கும்பலுக்கு வழங்கியதன் காரணமாக கரந்தேனிய சுத்தாவே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - தலங்கம, அக்குரேகொட பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, கொல்லப்பட்ட இருவரும் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதன்போது, ஒரு பெண்ணும் ஒரு ஆணும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினர், எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பது குறித்து தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |