மீண்டும் வீடொன்றின் மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு! இருவர் பலி
sri lanka
people
kurunagal
By Shalini
குருணாகல் - ரிதிகம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பெய்துவரும் அடை மழை காரணமாக பல இடங்களுக்கு மண்சரிவு அபாயய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினமும் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்திருந்தனர்.
மேலும் சீரற்ற வானிலையால் நேற்று வரை 15 பேர் உயிரிழந்திருந்ததுடன், 7529 குடும்பங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.