சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களின் அதிர வைக்கும் செயல்
பிபில, திக்கோம்மன, நாகல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், கசிப்பு தயாரித்துக்கொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று சந்தேக நபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டதாக பிபில காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி, பிபில காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் OIC, சப்-இன்ஸ்பெக்டர் சஜித் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டது.
சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிபில, நாகல பகுதியைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்களில் இருவர் பதினேழு வயது பாடசாலை மாணவர்கள், மற்றவர் இருபத்தைந்து வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கசிப்பு காய்ச்சியபோது கைது செய்யப்பட்ட மாணவர்கள், இந்த ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தவர்கள். அந்தப் பகுதியில் உள்ள பிரதான பாடசாலையைச் சேர்ந்தவர்கள்.
காவல்துறை மேலதிக விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம் வடிக்கும் கருவிகளுடன் மூன்று சந்தேக நபர்களும் இன்று (04) பிபில நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தனர்.
மொனராகலைப் பிரிவுக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கமல் என். குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், பிபில காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ஏ.எஸ்.பி.சி.எஸ்.கே. செனரத் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
