வெளிநாட்டு போலி நாணயத் தாள்களுடன் இரு இலங்கையர் சிக்கினர்
ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான போலி நாணயத்தாளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு- தெமட்டகொட வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவரும் 45 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சிறிலங்கா விமானப் படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினால் இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் போலி நாணயத் தாளைக் கொடுத்து இலங்கை ரூபாவினை கொள்வனவு செய்ய இந்த நபர்கள் முயற்சித்திருந்தனர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பணப் பரிமாற்ற முகவர்களிடமிருந்து குறித்த நாணயத்தாள் இந்த தம்பதியினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஒரு மில்லியன் யூரோ என அச்சிடப்பட்டு இந்த நாணயத் தாள் காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.