முந்திச் செல்ல முற்பட்டவேளை இடம்பெற்ற அனர்த்தம் - இருவரின் உயிர் பறிபோனது(photos)
srilanka
accident
police
death
investigation
By Sumithiran
அலவ்வ - கிரியுல்ல பிரதான வீதியின் மிரிஹெலிய பிரதேசத்தில் இன்று (28) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் வந்த பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
அலவ்வ, உதகன்கந்த பகுதியைச் சேர்ந்த சிறினிமல் விக்கிரமசிங்க (37) மற்றும் பிரியங்கர சம்பத் (32) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அலவ்வ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி