திருமலையை உலுக்கிய சகோதரிகளின் படுகொலை: 15 வயது சிறுமி கைது!
புதிய இணைப்பு
மூதூர், தாஹா நகரில் உள்ள வீடொன்றில் சகோதரிகளான பாட்டிகள் இருவரை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுமி ஒருவரை மூதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
இதன்படி, மூதூர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், கொலைகளைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இறந்த பெண்களின் பேத்தி என்று கூறப்படும் சிறுமியை தற்போது காவலில் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கொலைக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை - மூதூர் பகுதியில் பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீவிர விசாரணை
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்தவரின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி (68 வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74 வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டுகாயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்