புடினின் பதிலில் மறைந்திருக்கும் இரகசியம்: முற்றாக வெளிக்கொணர்ந்த ஜெலென்ஸ்கி!
முன்மொழியப்பட்ட போர்நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) தெளிவற்ற பதிலானது மிகவும் சூழ்ச்சிகரமானது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைனால் ஆதரிக்கப்பட்ட 30 நாள் போர்நிறுத்தம் குறித்த தனது முதல் பொதுக் கருத்துக்களில், புடின் தான் அதனை ஆதரிப்பதாகவும், ஆனால் அதற்கு தீவிர நிபந்தனைகள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ட்ரம்பிடம் சொல்ல பயம்
முன்னதாக நிபந்தனைகள் இல்லாமல் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால் புடின் பல வழிகளில் தடைகளை உருவாக்கி வருவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ரஷ்யா உண்மையில் ஒரு மறுப்பைத் தயாரித்து வருவதாக தெரிவித்த ஜெலென்ஸ்கி, இந்தப் போரைத் தொடர விரும்புவதாக ஜனாதிபதி ட்ரம்பிடம் நேரடியாகச் சொல்ல விளாடிமிர் புடின் பயப்படுவதாகவும் கூறியுள்ளார்.
புடினின் முயற்சி
இந்த நிலையில், பயனில்லாத முன்நிபந்தனைகளுடன் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு போர்நிறுத்த யோசனையை இழுத்தடிப்பதற்கு புடின் முயற்சி செய்து வருவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விளாடிமிர் புடின் இவற்றை நேரடியாக சொல்லா விட்டாலும், நடைமுறையில் எல்லாவற்றையும் தாமதப்படுத்தி, சாதாரண தீர்வுகளை சாத்தியமற்றதாக்கும் வகையில் அவர் இவற்றை செய்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உக்ரைன், குறித்த போர்நிறுத்தத்தை தனது இராணுவ நலனுக்காக பயன்படுத்திவிடும் என்ற கவலையும் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்