சீனாவை நிலைகுலைய செய்த பாவி புயல்! அடுத்து தாய்வானை நோக்கி
சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் கூடிய இந்த புயல், தற்போது தாய்வானின் வடக்கு நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை தாய்வானில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
முடப்பட்ட பாடசாலைகள்
இதன்படி அந்நாட்டின் தலைநகரான தாய்பேயில் அனைத்து பாடசாலைகளும் முடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜப்பான், ஹாங்காங் மற்றும் பிற இடங்களுக்கான பல விமானங்கள் சனிக்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
புயலின் தற்போதைய வடமேற்குப் பாதையானது, சனிக்கிழமையன்று தாய்வானின் வடக்கே கடந்து செல்வதற்கு முன்பு, சில தொலைதூர ஜப்பானியத் தீவுகளைக் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சீனாவின் ஃபுஜியான் சில படகு வழித்தடங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், படகுகளைத் துறைமுகத்திற்குத் திரும்புமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
இடிந்து விழுந்த அணை
மழையால் நீர்த்தேக்கங்கள் உடைந்த நிலையில், ஹெங்சோவில் உள்ள ஒரு அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், வேகமாகப் பாய்ந்த சேற்று நீர் ஒரு பரந்த பகுதியை மூழ்கடித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெள்ளத்தால், கட்டிடங்களின் இரண்டாவது மற்றும் அதற்கு மேற்பட்ட மாடிகளில் இருந்த மக்கள், மீட்புக் குழுவினர் வந்து சேரும் வரை பல நாட்களாக மின்சாரமின்றி சிக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |