யுகதனவி மின் உற்பத்திநிலையத்தில் உறுதியாக காலூன்றுகிறது அமெரிக்கா
us
yugatanavi-power-plants
srilanka central bank
By Sumithiran
தற்போது அரசாங்கத்துக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை கொள்வனவு செய்யும் திட்டத்திற்கிணங்க அமெரிக்க நிறுவனம் 250 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த பங்குகளை கொள்வனவு செய்யவுள்ள அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் வழங்கும் நிதி எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்தியவங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த யுகதனவி மின் உற்பத்தி நிலையம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசின் 11 பங்காளி கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.