திடீரென காவல் நிலையத்தில் முன்னிலையான உதய கம்மன்பில!
Sri Lanka Police
Sri Lanka
Udaya Gammanpila
By Shalini Balachandran
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்தநிலையில் குளியாப்பிட்டிய காவல் நிலையத்திற்கு இன்று (09.05.2026) காலை அவர் வருகை தந்துள்ளார்.
திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரியின் மரணம்
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், குறித்த மரணம் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதய கம்மன்பிலவின் அந்த அறிக்கை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி