நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட தகவல்
meeting
udaya gammanpila
mahinda yaba abewardane
july 6th
By Vanan
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (26) கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தப் பிரேரணையை எப்போது விவாதத்திற்கு அனுமதிப்பது குறித்து அடுத்த கட்சித்தலைவர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி கட்சித்தலைவர்கள் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றத்தை செய்த அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினரால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி