கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது
50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைதாகியுள்ளார்.
கைதானவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் உருண்டைகள்
சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டாரை வந்தடைந்து, அதன்பின்னர், அங்கிருந்து கட்டார் விமான சேவைகளுக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று (13.09.2026) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்துள்ளார்.
சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தினுள் வைத்து இவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் எஞ்சிய கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, சந்தேகநபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 23 மணி நேரம் முன்