பிரித்தானியா பிரஜைகளுக்கான பயண ஆலோசனைகள்! வெளியிடப்பட்ட எதிர்ப்பு
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த பயண ஆலோசனைகளில் மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பயண ஆலோசனை
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பிரித்தானியா, தனது பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை கடந்த 5 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் புதுப்பித்தது.
அத்துடன், இலங்கை தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தெளிவான புரிதலை ஏற்படுத்துவதற்காக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயண ஆலோசனையின் மூலம் வழங்கப்பட்ட எதிர்மறையான தகவல்களை நீக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மாற்றியமைக்கப்பட்ட பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி
கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பயண ஆலோசனைகளுடன் ஒப்பிடும் போது, தற்போது மாற்றியமைக்கப்பட்ட ஆலோசனைகள் இலங்கைக்கு பயனுள்ளதாக அமையுமென இலங்கையின் சிறப்பு அனுபவமிக்க பயணக் குழு என்ற நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஷாம் கிளார்க் (Sam Clark) தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த பயண ஆலோசனைகள் மேலும் திருத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களை போன்ற போராட்டங்கள் எதிர்காலத்திலும் எந்த நேரத்திலும் முன்னெடுக்கப்படலாமென அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் நிலையை தொடர்ந்தும் கண்காணித்து காலத்துக்கேற்ப பயண ஆலோசனைகளை மாற்றியமைக்க பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஷாம் கிளார்க் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |