இலங்கைக்கான பயணம் -பிரிட்டன் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைக்கான பயணம்
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களை மேற்கொள்ளவேண்டாமென தனது நாட்டு பிரஜைகளுக்கு பிரிட்டன் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய அனைத்திற்கும் எதிராக பிரிட்டன் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) மேற்படி அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இந்த ஆலோசனையானது இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடான விமானப் போக்குவரத்துக்கு பொருந்தாது.
அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு
சிறிலங்கா கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
#Srilanka The FCDO now advises against all but essential travel to Sri Lanka, due to the impact of the current economic crisis. More info: https://t.co/SpBzpbKYd0 pic.twitter.com/F7gkXxUCWn
— FCDO Travel Advice (@FCDOtravelGovUK) July 5, 2022
எரிபொருள் பற்றாக்குறை (டீசல் மற்றும் பெட்ரோல்) போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கிறது. தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் போராட்டங்கள் மற்றும் வன்முறை கலவரம் ஏற்பட்டுள்ளது.
வன்முறை அமைதியின்மை
மேலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் மற்றும் வன்முறை அமைதியின்மை குறுகிய அறிவிப்பில் ஏற்படலாம். மேலும் விபரங்களுக்கு ‘பற்றாக்குறைகள்’ மற்றும் ‘அரசியல் சூழ்நிலை’யை பார்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.