காசாவில் சிக்கியுள்ள பிரித்தானிய எம்.பியின் உறவுகள்: இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும் தகவல்!
காசாவில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கானோரில் தமது உறவினர்களும் உள்ளடங்குவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லைலா மோரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, காசாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் குறித்த தரப்பினர் சிக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தண்ணீர் மற்றும் உணவின்றி இறக்கும் தறுவாயில் தமது உறவினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைலா மோரனின் உறவுகள்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்ட போது, தமது உறவினர்களின் வீடு குண்டுத்தாக்குதல்களுக்குள்ளானதாக லைலா மோரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த வீட்டில் இருந்த தமது பாட்டி, அவரது மகன், மனைவி, இரட்டை குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் தேவாலயத்துக்குள் அடைக்கலம் தேடி நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, 60 நாட்களுக்கும் மேலாக அவர்கள் ஏனையோருடன் குறித்த தேவாலயத்தில் இருப்பதாக லைலா மோரன் தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் நத்தார் பண்டிகை வரை அவர்கள் உயிரோடிருப்பார்களா என்பது கேள்விக்குரியாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
I’m grateful to all who have been helping to raise the alarm about the situation in the church. It’s going from bad to worse. https://t.co/MY1ZICefTo
— Layla Moran ? (@LaylaMoran) December 16, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |