மகாராணியின் இறப்பிற்கு பின்னர் மோசமான முகத்தை காட்டும் கமிலா - பிளவடையும் அரச குடும்பம்!
பிரித்தானிய மகாராணி எலிசபெத் இறந்ததில் இருந்து, கமிலா தானே இனி எல்லாம் என்பது போல நடந்து வருவதாகவும் இதன் காரணமாகவே அரச குடும்பத்தில் பிளவுகள் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கமிலா மீது மிகுந்த எரிச்சல் கொண்டுள்ளார் எனவும் தகவல் கசிந்துள்ளது.
அதன்படி ராணி எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு கமிலாவின் அணுகுமுறை மோசமாக மாறிவிட்டது என்று கேட் நம்புவதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் Radar Onlineஇடம் தெரிவித்துள்ளன.
கமிலா கேட் இடையே வாக்குவாதம்
பக்கிங்காம் அரண்மனையில் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதில் ராணி கமிலா பற்றி நினைப்பதை அவர் முகத்துக்கு நேராகவே கேட் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கமிலா தனது அரச கடமைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அந்த பாத்திரத்திற்கு அவர் தகுதியானவர் அல்ல எனவும் கேட் நினைப்பதாகவும் கூறப்படுகிறது.
