உக்ரைனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார் இல்லை : புடின் அறிவிப்பு

Russo-Ukrainian War Ukraine Russia
By Kathirpriya Sep 05, 2023 11:14 AM GMT
Report

ரஷ்யாவினுடைய வேளாண்மைப் பொருட்களினை ஏற்றுமதி செய்ய மேலைத்தேய நாடுகள் அனுமதி வழங்கும் வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படாது என ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளாா்.

உணவுப் பற்றாக்குறை காணப்படுகின்ற ஆபிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் ஊடக தானியங்களைக் கொண்டு செல்வதற்காக கைச்சாத்திடப்பட்டிருந்த கருங்கடல் ஒப்பந்தத்தினை ரஷ்யா நிறுத்திவைப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

துருக்கியின் அதிபர் எா்டோகனுடன் தானிய ஒப்பந்தம் குறித்து விளாடிமிர் புடின் பேச்சுவாா்த்தை ஒன்றை நிகழ்த்தியிருந்தார், அது சம்பந்தமாக அவர் கூறியதாவது:

தானிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து உணவுப் பொருட்கள், உரம் ஆகியவற்றை உலகின் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின் - ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஜெலென்ஸ்கி

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின் - ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஜெலென்ஸ்கி

தானிய ஒப்பந்தம்

ஆனால், அந்த உறுதிமொழியினை மேலைத்தேய நாடுகள் நிறைவேற்றாததன் காரணத்தால் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்திவைத்திருப்பதாக அவர் கூறினார்.

உக்ரைனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார் இல்லை : புடின் அறிவிப்பு | Ukrain Russian War Urged Black Sea Agreement

இந்த உறுதிமொழியின் பிரகாரம் ரஷ்யாவின் வேளாண்மை பொருட்களை ஏற்றுமதி செய்ய மேலைத்தேய நாடுகள் அனுமதி அளித்தால் மாத்திரமே தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறினார்

அந்த உறுதிமொழியை மேலைத்தேய நாடுகள் முறையாக அளித்தால் இன்னும் சில நாட்களிலேயே தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவா் கூறினார்.

ரஷ்ய - உக்ரைன் போரின் ஒரு பகுதியான, கருங்கடல் பகுதியில் ரஷ்யா தனது போா்க் கப்பல்களை நிறுத்தி வைத்திருந்ததனால், அந்தக் கடல் வழியாக உக்ரைன் பிற நாடுகளுக்கு பொருட்களை கொண்டு செல்வவதற்கு தடையை விதித்தது.

இந்நிலையில் தற்போது ரஷ்யா இப்படியொரு விடயத்தை முன்வைத்திருப்பது உயிா் காக்கும் உணவுப் பொருள்களை தனது போா் ஆயுதமாக புடின் பயன்படுத்துவதாகவே அமைகிறது என்று மேலைத்தேய நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

உக்ரைனின் தானிய மையங்களைக் குறிவைத்துத் தாக்கிய ரஷ்யா

உக்ரைனின் தானிய மையங்களைக் குறிவைத்துத் தாக்கிய ரஷ்யா

உக்ரைனுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா - ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் பலி

உக்ரைனுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா - ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் பலி

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி