ரஷ்யாவின் விண்வெளி மையம் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்
ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ் விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் முக்கிய தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஜெலென்ஸ்கி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
“உக்ரைன் அந்த மையத்தை FP-5 ஃபிளமிங்கோ குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. மேலும், அதனை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் முக்கிய நிறுவனங்களில் ஒன்று. அது மின்னணு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது” என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
Today, there are new significant results from our deep strikes. In Russia’s Samara region, one of the key enterprises within Roscosmos – the Progress Center, which was involved, among other things, in electronics production – was hit. Flamingo missiles were used. A good… pic.twitter.com/1BlZpmvKRN
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 15, 2026
தாக்குதல்களின் பின்விளைவு
மேலும் உக்ரைன் மீதான ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்கள் வைக்கப்பட்டிருந்ததாக உக்ரைனியத் தலைவர் கூறிய நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள சவாஸ்லேகா விமானத் தளம் மற்றும் எஸ்டோனியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள உஸ்ட்-லுகாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையம் ஆகியவற்றின் மீது கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.

இதன்படி சில தாக்குதல்களின் பின்விளைவுகளைக் காட்டுவதாகத் தோன்றும் காணொளிக் காட்சிகளை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில்,தொலைவில் உள்ள இடங்களில் பெரிய கருப்புப் புகைத்தூண்களையும் தீச்சுவாலைகளையும் காண முடிகிறது” என்றும் விவரித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |