ரஷ்யாவின் 6 போா் விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்
Russo-Ukrainian War
World
By Dilakshan
ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ரஷ்யாவின் 6 போா் விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
அத்தோடு, எல்லைப் பிராந்தியமான ரோஸ்தொவில் அமைந்துள்ள மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மேலும் 8 விமானங்கள் கணிசமாக சேதமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்புக்கள்
இந்த தாக்குதலின் காரணமாக ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக எஸ்யு-27 மற்றும் எஸ்யு-34 ரக விமானங்களை மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் ரஷ்யா தரித்து வைத்துள்ளது.
எவ்வாறாயினும் உக்ரைன் தங்களது விமானங்களை அழித்துள்ளதாக ரஷ்யா இதுவரை உறுதி படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி