மக்கள் தஞ்சமடைந்த தியேட்டர் மீது ரஷ்யா கோரத்தாக்குதல்!

russia blast ukraine war bomb
By Kalaimathy Mar 17, 2022 07:01 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இன்று 22 ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.

துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது.

மேலும் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படைகள் தடுத்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. அந்நகரில் சிக்கியுள்ள மக்கள் பதுங்கு குழியிலும், கட்டிடங்களின் அடித்தளங்களிலும் தவித்தபடி உள்ளனர்.

இந்தநிலையில் மரியுபோல் நகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர். அந்த தியேட்டர் மீது ரஷ்யா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் தியேட்டர் முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்த மக்களின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதுகுறித்து மரியுபோல் உள்ளூர் கவுன்சில் வெளியிட்ட தகவலில் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் தஞ்சம் அடைந்த தியேட்டரை அழித்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் தியேட்டர் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுப்பு தெரிவித்து உள்ளது. மரியுபோல் நகரில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 13 நாட்களாக தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள் என்றும், இன்னும் அந்நகருக்குள் 4 லட்சம் பேர் சிக்கி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போர் தொடங்கி 3 வாரம் கடந்து விட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றன.

கீவ்வின் புறநகர் பகுதிகளை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள் அங்கு தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் கீவ் நகருக்குள்ளும் ஏவுகணைகள் வீசப்பட்டு வருகிறது. ஆனாலும் ரஷ்ய படையால் கீவ் நகருக்குள் இன்னும் நுழைய முடியவில்லை.

அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவத்தினர் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். 2ஆவது பெரிய நகரமான கார்கிவ்விலும், ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தபடி  இருக்கின்றது.

அதேபோல் மற்ற நகரங்களிலும் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தபடி இருப்பதாகவும் வான்வழி தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை ஒலி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தநிலையில் ரஷ்யாவின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்த வந்த ரஷ்ய விமானங்களை உக்ரைன் இராணுவத்தினர் தாக்கி அழித்தனர் என்று தெரிவித்து உள்ளனர்.



You May Like This


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, கல்வியங்காடு, கொழும்பு

06 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Warendorf, Germany

06 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், பரந்தன், மிலான், Italy

28 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024