உக்ரைனின் முக்கிய தாக்குதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன்: எலான் மஸ்க் அதிரடி
ரஷ்யாவின் கடற்படைத்தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் கடற்படை தளம்
இந்த நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எனினும், இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை செயல்படுத்தவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான் இதற்கு முக்கிய காரணம். இதற்கு ஒத்துழைக்கும் வகையில் உக்ரைனின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்' எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.