உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவிற்கு பயணம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு வருகைதரவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ஆம் திகதி அமெரிக்காவிற்கு வருகைதந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திக்கவுள்ளார்.
இதன்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், இராணுவ தளபாடங்கள் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி-ஜோ பைடன் சந்திப்பு
உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோன்று ஜோ பைடன் உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இதேவேளை உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.