ஐ.நா. ஊழியர்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோரை விடுதலை செய்த ஹவுதி
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டிருந்த ஐ.நா. ஊழியர்கள் உள்பட 153 பேரை விடுதலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்களிடையே இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இப்போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வந்தத.
ஆளில்லா விமான தாக்குதல்
இதனால் இஸ்ரேல் மீது அவ்வப்போது ஆளில்லா விமான தாக்குதல்களை ஹவுதி நடாத்தி வந்ததுடன் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி சரக்கு கப்பல்களில் பயணிக்கும் மாலுமிகளையும் கைது செய்து வந்தனர்.
மேலும் , ஏமனில் தங்கள் கட்டுப்பாடில் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த ஐ.நா. அமைப்பின் ஊழியர்களையும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இந்நிலையில், தங்கள் பிடியில் உள்ள ஐ.நா. ஊழியர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (25.01.2025) விடுதலை செய்துள்ளனர்.
153 பேரை விடுதலை செய்தபோதும் ஐ.நா. ஊழியர்கள் மேலும் 7 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர்.
அதேவேளை தங்கள் அமைப்பை சேர்ந்த ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதால் ஏமனில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ஐ.நா. முன்னதாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |