மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!
புதிய இணைப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் எம்.எல்.ஏக்களாக சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.
குறிப்பாக தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ள நிலையில் வெற்றி பெற்ற இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக வேட்பாளர் பரந்தாமனைவிட சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றதுடன், திமுக வேட்பாளரைவிட சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிபெற்றார்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக. சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் இறுதி முடிவுகள்
தவெக – 66,841
திமுக – 57,370
அதிமுக – 44,874
நாம் தமிழர் – 5,249
சிபிஐ - 1,150
ஐந்தாம் இணைப்பு
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள் : மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன்படி மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் த.வெ.க முன்னிலை வகித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
5 சுற்றுகளுக்கு பின்னர் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.கவை பின்னுக்கு தள்ளி த.வெ.க மீண்டும் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை – பிற்பகல் 1 மணி நிலவரம்
த.வெ.க – 41,327
தி.மு.க – 33,263
அ.தி.மு.க –27,561
நாம் தமிழர்– 3,361
சி.பி.எம் –734
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை – பிற்பகல் 1 மணி நிலவரம்
த.வெ.க – 38,128
தி.மு.க –25,354
அ.தி.மு.க –21,537
நாம் தமிழர்– 1,067
சி.பி.எம் –866
நான்காம் இணைப்பு
தமிழ்நாட்டின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை வகித்து வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
முதல் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்து வந்தார்.
ஆரம்பத்தில் 60 வாக்குகள் வித்தியாசத்தில் காணப்பட்ட முன்னிலை, பின்னர் 1,000 வாக்குகளுக்கும் அதிகமாக அதிகரித்திருந்தது.
எனினும், ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முன்னெடுக்கப்பட்டபோது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமா முன்னிலைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்ப

10:06 AM, Oct 09 2026 மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 15,847
திமுக வேட்பாளர் பரந்தாமன் 11,284
அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 9,838
நாம் தமிழர் கட்சி 154
சிபிஎம் 70

10:05 AM, Oct 09 2026 தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்
அதிமுக வேட்பாளர்பானுமதி 9,109
தவெக வேட்பாளர்சத்தியபாமா 8,186
திமுக வேட்பாளர்சுகன்யா 6,693
நாம் தமிழர்வேட்பாளர் 536
சிபிஐ 160
முதலாம் இணைப்பு
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது த.வெ.க அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.
த.வெ.க, தி.மு.க, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் இவ்விரு தொகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு
அந்தவகையில், மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. 2 தொகுதிகளிலும் தற்போதைய நிலவரப்படி தவெக முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகதம் குமரவேல் 67 தபால் வாக்குகளும், திமுகவின் பரந்தாமன் 55 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 28 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் தவெகவின் சத்தியபாமா 72 வாக்குகளும், திமுகவின் சுகன்யா 68 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 56 வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர்.
இரு மையங்களிலும் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை அறைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மதியத்திற்குள் முன்னிலை நிலவரங்கள் மற்றும் இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாகத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |