ஜே.ஆரின் ஆட்சியில் இருந்து தொடரும் பாதாள உலக குழுக்களின் பங்களிப்பு : சிறிநேசன் பகிரங்கம்

Sri Lanka Sri Lankan Peoples Gnanamuththu Srineshan
By Rusath Nov 01, 2025 09:04 AM GMT
Report

இலங்கை அரசியலில் அடிப்படைவாதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் கலந்து விட்டது. அத்துடன், சுயநல நோக்கான ஊழல் மோசடியும் இரண்டறக் கலந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (G.Srinesan) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான விபரீத அரசியலின் விகாரமான விளைவுகளில் ஒன்றாகவே பாதாள உலக உறுப்பினர் தோன்றியுள்ளதுடன், தொடர்ச்சியாகவும் இருந்து வருகின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று (31) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இனவழிப்புகளில் ஈடுபட்ட படையினர்

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அடிப்படைவாத அரசியலுக்கு இனவாதம், மதவாதம், என்பது இன்றியமையாத தேவைகளாவுள்ளன.

வாக்காளர்களின் 74 வீதமான சிங்கள வாக்குகளை இலக்காகக் கொண்டதாக சிங்கள அரசியல் காணப்படுகின்றது. அதற்காக சிங்கள இனவாதம் தேர்தல்களின் போது விதைக்கப்படுகின்றன. இதனால், இனவாத வெற்றிகள் கிடைக்கின்றன.

ஜே.ஆரின் ஆட்சியில் இருந்து தொடரும் பாதாள உலக குழுக்களின் பங்களிப்பு : சிறிநேசன் பகிரங்கம் | Underworld Gang Contribution From Jr Jayewardene

அதேவேளை, இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் சீர்குலைக்கப்பட்டுள்ளன. மேலும், இனமுரண்பாடு, இனவன்முறை, இனக்கலவரம் இனமோதல், இனப்போர் இனவழிப்பு என்பன தோற்றுவிக்கப்படுகின்றன.

மேலும், தமிழர்களுக்கு எதிராக 1956 இல் இருந்து 2009 வரை இனவழிப்புகளில் ஈடுபட்ட படையினரோ, குண்டர்களே, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதில்லை. அல்லது நிறுத்தப்படுவது அரிதாகவுள்ளது. இதனால், படுகொலைகள் செய்தவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தப்பி விடுகின்றனர்.

மேலும் தண்டிக்கப்படாத குற்றவாளிகள் முக்கிய அரசியல் வாதிகளின் அடியாட்களாக மாறுகின்றனர். அரசியல் வாதிகளின் அடிப்படைவாதம், மோசடி அரசியல், வன்முறை அரசியல் என்பவற்றுக்கு தண்டிக்கப்படாத குற்றவாளிக் குண்டர்கள் ஒத்துழைத்து வருகின்றனர்.

இவர்களை அந்த அரசியல்வாதிகள் தமது தேவை உள்ளவரை பாதுகாக்கின்றனர். இவர்கள் கறுப்பு வியாபாரம், கூலிக்கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம், பாலியல் பலாத்காரம் என்பவற்றில் ஈடுபடுகின்றனர்.

முச்சக்கரவண்டி கட்டண திருத்தம்: வெளியாகிய அறிவிப்பு

முச்சக்கரவண்டி கட்டண திருத்தம்: வெளியாகிய அறிவிப்பு

ராஜபக்சக்களின் ஆட்சி

ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஆட்சியில் இருந்து ராஜபக்சக்களின் ஆட்சிகள் என்று பாதாள உலக குழுக்களின் பங்களிப்புகளைப் பார்க்க முடிகின்றது.

கோணாகல சுனில், சொத்தி உப்பாலி, கணேமுல சஞ்சீவ, பொட்ட நவ்பர், வலேசுதா, கஞ்சிப்பான இம்ரான், கஜ்ஜா, அமரே, கெகல் பத்ர, பெக்கோசமன், இஸாரா செவ்வந்தி, பாய், பேபி, பாபா என்று பாதாளலோகர் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

ஜே.ஆரின் ஆட்சியில் இருந்து தொடரும் பாதாள உலக குழுக்களின் பங்களிப்பு : சிறிநேசன் பகிரங்கம் | Underworld Gang Contribution From Jr Jayewardene

இவர்கள் குறித்த அரசியல்வாதிகளுக்காக உழைத்து உயிரையும் விடுகின்றனர். சில வேளைகளில் இந்தப் பாதாளலோகர்கள் அகப்பட்டு அரசியல் வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டால், அந்த அரசியல்வாதிகள் தமது பாதாளலோக உறுப்பினர்களை அழித்தும் விடுகின்றனர்.

அண்மையில், கொல்லப்பட்ட கஜ்ஜா இதற்கோர் உதாரணமாகும். விபரீதமான அடிப்படைவாத மோசடி அரசியல் வாதிகளின் விகாரத் தோற்றங்களாக உருவாக்கப்படும் பாதாள லோகர்கள் குறுங்கால வாழ்வியலுக்கே உரித்துடையவர்களாகின்றனர்.

இவர்கள் அரசியல் வாதிகளின் விபரீத தேவைகளுக்குப் பயன்பட்டு, விகாரத் தோற்றங்களைக் காட்டிய பின்னர், கொல்லப்படுகின்றனர், சிறைகளுக்குள் வாழ்கின்றனர், தலைமறைவாகவும் வாழ்கின்றனர். இவர்கள் விபரீத அரசியலின் விகார விளைவுகளாகவே கணிக்கப்படுகின்றனர்.

அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக, பாதாளலோக இளைஞர்கள் தமது வாழ்வையே பலியிடுகின்றனர். இவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வு, தீர்வு அவசியமானதாகும்” என தெரிவித்துள்ளார்.

மேற்கு கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு

மேற்கு கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025