வேகமாக பரவும் உருமாறிய வைரஸ் -லண்டனில் வெளியான அறிவிப்பு
corona
virus
kingdom
By Vasanth
உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகபரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தலைநகர் லண்டனில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள அரசு, லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் கொரோனா அவசரகால மருத்துவமனைகளை மீண்டும் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி