பிரித்தானியர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
பிரித்தானியாவில் அறுபது பேரில் ஒருவர் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டமை பதிவாகியுள்ளது. தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் நவம்பர் மாதம் 27 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வாரத்தில் 10 இலட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தில் 10 இலட்சத்து 35 ஆயிரமாக பதிவாகியிருந்ததாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இது மொத்த மக்கள் தொகையில் 1 புள்ளி 7 வீத அதிகரிப்பாகும் என தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் கூறியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை, ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்திலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ்சில் தொற்று எண்ணிக்கை நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 60 பேரில் ஒருவருக்கும், வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் தலா 45 பேரில் ஒருவருக்கும், ஸ்கொட்லாந்தில் 65 பேரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.