பிரிட்டனில் பரவும் புதிய தொற்றுடன் இலங்கைக்கு வந்த இருவர் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் தற்போது பரவும் புதியவகை வைரஸ் தொற்றுகளுடன் இரண்டு இலங்கையர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 24 மணிநேரத்தில் நாட்டுக்கு திரும்பியவர்களிடையே இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஆறு இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பியிருந்தனர்.
அவர்களிடையே இந்த இருவரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
பிரிட்டனுக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்ட திகதிக்கு முன்னதாகவே அங்கிருந்து இவர்கள் இருவரும் நாடு திரும்பியிருக்கின்றனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இவர்கள் இருவர் மற்றும் இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்த 4 பேர் உட்பட 6 பேரும் விசேட விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.