வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா தமிழரின் அபிலாஷைகள் தொடர்பான நிலைப்பாட்டை வலியுறுத்தல்!
srilanka
india
unitednations
By Vasanth
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் போது ஐ.நா.வின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமிழ் அபிலாஷைகளை இணைக்கும் முந்தைய நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்திய போதும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழர்களின் பிரச்சினையை ஆதரிப்பதோடு, இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் ஆதரிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும், 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்ப்படுத்துமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.